இந்திய விமானியை சிறைபிடித்த பாகிஸ்தான் வீடியோ காட்சி வெளியீடு :
இதில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரரின் விமானம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டு எல்லைக்கு உள்ளே போய் விழுந்தது. அவர் அதில் இருந்து குதித்து பாராசூட்டில் உதவியுடன் பாகிஸ்தான் எல்லைக்குள் இறங்கினார்.
அப்பொழுது அதைக்கண்ட பாகிஸ்தான் மக்கள் விங் கமாண்டர் அபிநந்தன் அடித்து உதைத்துள்ளனர். அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரை மீட்டு தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பாகிஸ்தான் மக்கள் மிருகத்தனமாக நடந்துகொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட வீரர் அபிநந்தன் அங்கு எப்படி உள்ளார் என்று வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கமாண்டர் கேட்கும் கேள்விக்கு எல்லாம் அபிநந்தன் பதிலளிக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டன.
அபிநந்தன் பற்றிய சில விவரங்கள்:
அபி நந்தனின் தந்தை மற்றும் தாயார் இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். அபி நந்தனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது அவர்கள் டெல்லியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.