Google CEO Biography-சுந்தர் பிச்சையின் வெற்றிக்கதை
சுந்தர் பிச்சை ஆரம்பகால வாழ்க்கை
சுந்தர் பிச்சை மதுரையில் ஜூலை இரண்டாம் தேதி1972இல் அன்று பிறந்தார். அவர் பிறந்தது என்னவோ மதுரையில் என்றாலும் வளர்ந்தது அனைத்தும் சென்னையில் தான். சுந்தர் பிச்சைக்கு சிறுவயதில் வீட்டில் பார்ப்பதற்கு டிவி கூட கிடையாது. அவர் இருந்தது என்னவோ நடுத்தர குடும்பம் வசிக்கும் 2 ரூம்கள் கொண்ட குடியிருப்பில்தான். சுந்தர் பிச்சை பள்ளிக்கு செல்வது எல்லாமே அரசு பேருந்து மற்றும் ஆட்டோக்களில் தான். சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி பிச்சை அவர்களுக்கு மகனாக பிறந்தார். சுந்தர் பிச்சையின் தந்தை பிரிட்டிஷ் கம்பெனியான ஜெனரல் எலெக்ட்ரிக்கல் என்ஜினியராக மாதம் 3000 ரூபாய்க்கு பணிபுரிந்து வந்தார். சுந்தர் பிச்சையின் வீட்டில் அப்பொழுது இருந்த ஒரு ஆடம்பர பொருள் என்றால் அது தொலைபேசி மட்டும்தான். சுந்தர் பிச்சைக்கு எங்களை ஞாபகம் வைத்திருக்கும் சக்தி அதிகமாகவே இருந்தது அது அவரது பெற்றோருக்கு அந்த தொலைபேசி வாங்கி கொடுத்த பின்னர்தான் தெரிய வந்தது. சுந்தர் பிச்சை தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஐஐடி கரக்பூரில் metrology என்கின்ற பிரிவை எடுத்து படிக்க ஆரம்பித்தார். பொதுவாக சுந்தர் பிச்சைக்கு மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக காணப்பட்டார். சுந்தர் பிச்சை பெண்கள் இருக்கும் திசை பக்கமே திரும்பி கூட பார்க்க மாட்டாராம். சுந்தர் பிச்சை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி என்கின்ற பெண் தோழியாக அறிமுகமானார். அப்பொழுது சுந்தர் பிச்சைக்கு அவர் மீது காதல் வந்தது. தனது கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் தனது காதலை அஞ்சலியிடம் சுந்தர் பிச்சை வெளிப்படுத்தினார். அஞ்சலியும் காதலை ஒத்துக்கொண்டார். பின்னர் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவின் உள்ள ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டியில் mba படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. உடனே அவரும் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவர் அமெரிக்கா செல்வதற்காக வீட்டில் பணம் கூட கிடையாது எப்படியோ அவரது பெற்றோர் பணத்தை தயார் செய்து சுந்தர் பிச்சையை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர். சுந்தர் பிச்சை மாதக்கணக்காக தனது காதலியிடம் பேசாமல் அங்கு இருந்தார். பின்னர் சுந்தர் பிச்சை அமெரிக்காவில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். சிறிது நாட்களில் அஞ்சலியும் அமெரிக்கா வந்தார். தனது வீட்டாரிடம் பேசி தங்களது காதலுக்கு முழு சம்மதம் வாங்கினார். பின்னர் திருமணம் செய்து கொண்டனர். சுந்தர் பிச்சைக்கு அஞ்சலி நீ கூகுளில் போய் பணிபுரிய வேண்டும் அதற்கு போய் நீ அப்ளை பண்ணு என்று சொல்லி இருக்காங்க. உடனே சுந்தர் பிச்சையும் கூகுளில் அப்ளை செய்த உடன் அவருக்கு வேலையும் கிடைத்தது. பின்னர் சுந்தர் பிச்சை அங்கு பணிபுரிய தொடங்கினார். சுந்தர் பிச்சை அங்கு உள்ள அனைவரிடமும் கூகுள் குரோம் செயலியை தயாரிக்க முடிவு செய்தார். அப்படி அவர் கடின உழைப்பிற்குப் பிறகு கூகுள் குரோமை உருவாக்கினார். அதனை யாரோ திருட்டுத்தனமாக வெளியாவதற்கு முன்பே வெளியிட்டனர். இதனால் அதிர்ந்து போனது கூகுள் சற்று மனம் தளர்ந்து போனால் சுந்தர் பிச்சை. அதனை கூகுள் அபிஷியல் ஆக வெளியிட்டது. வெளியிட்ட சிறிது நாட்களிலே கூகுள் குரோம் உலகத்தின் மிகப்பெரிய தேடுதளம் ஆக உருவெடுத்தது. அது விண்டோஸின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது. இதையடுத்துதான் சுந்தர் பிச்சை google லில் ஒரு நல்ல பெயர் கிடைத்தது. சுந்தர் பிச்சையை உலகத்தின் முன்னணி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் வந்து இணைந்து விடுமாறு பல செய்தி அனுப்பினர். இதைவிட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுந்தர் பிச்சை தலைமை செயல் அதிகாரியாக ஆக்குகிறேன் நீங்கள் இங்கு வந்து சேர்ந்தது ஆனா அது சுந்தர் பிச்சை நிராகரித்துவிட்டார். இருப்பினும் மைக்ரோ சாஃப்ட் ஒரு இந்தியரான சத்தியநாதன் அல்லாவை அதன் சிஇஓவாக நியமித்தது. பின்னர் ஆண்ட்ராய்டு பொறுப்பை கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சையிடம் ஒப்படைத்தது. அத பொறுப்பையும் மிகவும் வெற்றிகரமாக சாதித்து முடித்தார் சுந்தர் பிச்சை. கடைசியில் சுந்தர் பிச்சைக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆம் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர் லாரி பேஜ். அவர் 2016ஆம் ஆண்டு சுந்தர் பிச்சையை அதிகாரப்பூர்வமாக கூகுளின் சிஇஓ-வாக அறிவித்தார். உலகின் மிகப்பெரிய நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப் பட்டதை எண்ணி உலகமே வியந்து பார்த்தது. சுந்தர் பிச்சை விடாமுயற்சி அவர் இந்த உச்சத்தை அடைய காரணமாக இருந்தது.
*******************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக