வெள்ளி, 1 நவம்பர், 2019

BIGIL Movie Review Tamil Full Story Explain

BIGIL Movie Review

  • வணக்கம் டுடே டாப் 10 ஆபீஷியல் வழங்கும் தமிழ் சினிமா விமர்சனம். இன்று நாம் பார்க்க இருக்கும் திரைப்படம் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில். ஏஜே இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு என பல திரைப்பட நட்சத்திரங்கள் நடத்தியிருக்கும் பிகில் படம் எப்படி உள்ளது. இப்படத்திற்கு படத்தொகுப்பு ரூபன், சண்டைப்பயிற்சி அனல் அரசு திரைக்கதை மற்றும் வசனம் அட்லி மற்றும் ரமன கிரி வசன், ஒளிப்பதிவு ஜி கே விஷ்ணு, இசையமைப்பு ஏ ஆர் ரகுமான், இயக்குனர் அட்லி.

  •  தந்தை ஓட கால்பந்து கனவை நினைவாக்க போராடுகிற ஒரு கால்பந்து வீரரின் கதைதான் பிகில். விஜய் மைக்கல் மற்றும் ராயப்பன் என்ற இரு வேடங்களில் தந்தை மகனாக இப்படத்தில் நடித்துள்ளார். பிகில் லா வர மைக்கேல் கால்பந்து வீரரா தந்தை பேச்சை தட்டாத ஒரு பெண் கால்பந்து அணிக்கு கோச்சாக வரார். பிகில் தனது ஏரியா மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனையாக களத்தில் இறங்கி சண்டையிடுவதும் கால்பந்தில் அனல் தெறிக்கும் விளையாட்டினால் தனது ரசிகர்களை ஈர்த்துள்ளார். சமூகத்தில் சாதிக்க நினைக்கும் பெண்களை சந்தித்து விஜய் கால்பந்தில் சேர்க்கும் அந்த நெடி விஜய் பாசமிகு அண்ணனாக தென்படுகிறார். ராயப்பன் அவர விஜய்க்கு வயதான தோற்றம் கை கொடுக்கவில்லை என்றாலும், தனது குரலினால் அதை ஈடு செய்துள்ளார். தன் மகன் தன்னைப் போல் ஒரு ரவுடியாக வந்துவிடக்கூடாது என்று கால்பந்து தேர்வுக் கமிட்டி பேசும்போதும், தனது பகுதி மக்களுக்கு பேசும்போதும் ஒரு  தலைவனாக தனது முத்திரையை பதிக்கிறார். 
  • இந்த சூல் நிலையில் நயன்தாரா விஜயின் மீது  கொண்ட காதலால் தன்னை  பெண்பார்க்கும் வரும் ஒவ்வொரு மாப்பிள்ளையையும் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார், படத்தில் நயன்தாராவின் பங்கு அவ்வளவாக சிறப்பாக அமையவில்லை. கதிர் விஜய் நண்பனாக கால் பந்தாட்ட அணியின் கோச் ஆக வருகிறார். அவர் சிறு காட்சிகளில் நடித்திருந்தாலும் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் நிறைவேறியது. யோகி பாபு பிகிலி நண்பனாக வந்து ஆங்காங்கே கலகலப்பை ஏற்படுத்தி விட்டுச் செல்கிறார். விவேக் கால்பந்து அணியின் மேனேஜராக பிற்பாதியில் அறிமுகமானாலும் காமெடிக்கு அவ்வளவு பெரிதாக உதவ வில்லை என்பதே உண்மை. ஜாக்கி ஜாப் கால்பந்து ஆட்ட சங்கத்திற்கு தலைவராக வந்து தனது வில்லத்தனத்தை காட்டுகிறார். இப்படத்தில் அனல் அரசின் சண்டைக்காட்சி மிகவும் சூப்பராக குறிப்பாக பைக் சண்டை காட்சிகள் தியேட்டரையே கதிகலங்க வைத்துள்ளது. ஜிகே விஷ்ணு ஓட ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
  •  படத்தில் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெறித்தனம் மற்றும் சிங்கப் பெண்ணே பாடல்கள் தியேட்டரை கலங்கடித்து உள்ளது. இப்படத்தின் இறுதி இரு அணிகளும் சளைத்தவர்கள் இல்லை என்றும் ஒருவருக்கொருவர் மோதி தெரிந்து கொண்டனர். இப்படம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் திறமையை பார்த்து அனைத்து துறைகளிலும் வேலை நடக்க வேண்டுமென்றும் காசுக்காக யாரையும் தேர்வு செய்யக்கூடாது என்பதுமே அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது திறமையை பார்த்து தேர்வு செய்தால் மட்டுமே எவ்விடத்திலும் தோல்வி என்பதே இருக்காது. இத்திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி விஜய் ரசிகர்களுக்கு தீபாவளியாக அமைந்துள்ளது. படம் ரிலீஸ் ஆகி 5 நாட்களில் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பிகில் மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
****************************