வியாழன், 6 டிசம்பர், 2018

Animation-உயிரோவியம்

உயிரோவியம்-Animation

அறிமுகம்:

பொருளை பேச வைக்கும், பாடாத பொருளை பாட வைக்கும், ஆடாத பொருளை ஆடவைக்கும் அதிசய அறிவியல் கலைதான் அனிமேசன். இது உயிரோவியம் என்றும் சொல்லலாம் உயிரோவியம் ஆக்கமே அனிமேஷன். நீங்கள் பார்க்கும் கார்ட்டூன் படங்கள் அனிமேஷனின் ஒரு வகைதான் மற்றும் நிஜமான நாய்கள் பேசுவதும் பூனைகள் விளையாடுவதும் யானைகள் ஆடுவதும். கற்பனைக்கு எட்டாத புதிய புதிய இயந்திர ராட்சதர்கள் மக்கள் மீது போர் தொடுப்பது கட்டிடங்கள் இடிந்து தகர்ந்து தீ பிடிப்பதும் மக்கள் அலறி ஓடுவது போன்ற ஹாலிவுட்படங்களை பார்த்திருப்பீர்கள். அவை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று சொல்லப்படுகிறது. அவதார் படம் முழுவதும் இவ்வகை அனிமேஷன் தான். வருங்காலத்தில் இந்த கல்வி கற்றவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வரப்போகிறது. சிக்கலான அறிவியல் கருத்துக்களை கூட எளிதாக விளக்கும் முறை வந்துள்ளது.

வழங்கப்படும் படிப்புகளும் கால அளவும்:

B.sc Animation&multimediaசம்பந்தமான படிப்பு 3 ஆண்டுகளை கொண்ட படிப்பாகும். M.sc Animationமுதுநிலை படிப்பானது இரண்டு வருடங்கள் கொண்ட படிப்பாகும்.M.sc(Digital film making) என்பதும் இரண்டு ஆண்டு படிப்பாகும்.

கல்வித் தகுதி:

மாணவர் இத்துறையில் பட்டப் படிப்பு படிப்பதற்கு அவர் பத்தாம் வகுப்பு அல்லது மேல்நிலைப்பள்ளியில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் வானவர் அனிமேஷன் படிப்பை முடித்து இருந்தால் அவரின் துறையில் நிபுணராக முடியும். அனிமேஷன் மற்றும் மல்டிமீடியா பிரிவில் பலவிதமான டிப்ளமோ எனப்படும் பட்டய படிப்பு மற்றும் பட்டப் படிப்புகளை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. இத்துறையில் மாணவர் கவனம் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட சில பணிகள் கீழே தரப்பட்டுள்ளன.

Pre-production:

ட்ரெடிஷனல் அனிமேஷன், கம்ப்யூட்டர் பேசிடு கிராபிக் டிசைனிங், ஸ்டாப் motion அனிமேஷன், மல்டிமீடியா புரோகிராமிங் அல்லது டிசைனிங், photoshop, வெப்சைட் டிசைனிங் அல்லது டெவலப்மெண்ட்,

Production:

கம்ப்யூட்டர் ஜெனரேட்டர் 3டி மற்றும் டூடி அனிமேஷன்
3d மாயா, மேக்ஸ்,mudboxபாக்ஸ்
டைனமிக்ஸ் மற்றும் Render.

Post-Production:

இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில்:

பொதுவாக அனைத்து பல்கலைக்கழகங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் அனிமேஷன் எனப்படும் உயிரோவியம் துறையில் பட்டப்படிப்பு களையும் பட்டாயா படிப்புகளையும் வழங்குகின்றனர். குறிப்பிட்ட சில கல்வி நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. sastra University,Tanjavur
  2. IIKM Business school,Chennai
  3. Loyola college.chnnai
  4. vel Tech,chennai
  5. Amity university
  6. sonna colleg of technology,salem
    1. The American College,Madurai

    வேலைவாய்ப்புகள்:

    மாணவர் இத்துறையில் பட்டப்படிப்பு படித்து நல்ல திறமையும் பெற்றிருந்தார் என்றார் அவருக்கு கீழ்காணும் தொழில்துறைகளில் பணி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

    1. பதிப்புத்துறை கிராபிக்ஸ் மற்றும் அச்சிடுதல்
    2. ராணுவம்
    3. இணைய வடிவமைப்பு
    4. பொறியாளர்கள்
    5. கல்வி கணினி அடிப்படையிலான பயிற்சி வகுப்புகள் மற்றும் இணைய அடிப்படையிலான வகுப்புகள்
    6. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள்
    7. பிசினஸ் பொருட்களை பிரபலப்படுத்த மற்றும் மார்க்கெட்டிங் செய்யும் முறை விளக்கங்கள்
    8. ஆடை வடிவமைப்பு வீடுகள் மற்றும் அலுவலகங்கள்
    9. கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் அல்லது மொபைல் விளையாட்டுகளை  உருவாக்குவது.
    10. மருத்துவ சட்ட காப்பீட்டு தொழில்துறை மற்றும் மாதிரிகள்
    11. விற்பனை
    12. விளம்பரத்துறை தொலைக்காட்சி விளம்பரங்கள் அச்சு விளம்பரங்கள்
    13. அனிமேஷன் பயிற்சி நிறுவனங்கள் ஆசிரியராக
    ***********************

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக