திங்கள், 17 டிசம்பர், 2018

The Indian team have lost to the Australian team-இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி

Image result for india australia match
AUS-326&243
IND-287&143
AUS WIN BY 146 RUNS
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 தொடர் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை வகித்தது. இதையடுத்து நடந்த இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பழிக்குப் பழி தீர்த்தது ஆஸ்திரேலிய அணி. இதன் மூலம் இந்த தொடர் ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலையில் உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் மூலம் தனது முதலாவது இன்னிங்சை தொடங்கி ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான இடைவெளியில் ரன்கள் உயர்ந்தது. ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து  முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முன்னணி ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்தனர். இருப்பினும் கேப்டன் கோலி அசத்தலாக விளையாடி சதம் அடித்தார். இவருக்கு துணையாக ரகானே அரைசதம் அடித்தார். பின்னர் வந்த வீரர்களும் ஜொலிக்காத காரணத்தால் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 83 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது Image result for india australia matchஇன்னிங்சை தொடங்கியது. இந்திய வீரர்களின் அதிரடியான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ரன்களை அடிக்க முடியவில்லை. இந்திய தரப்பில் முகமது சமி 6 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி. ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது கேஎல் ராகுல் ஒரு ரன்னிலும, முரளி விஜய் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த புஜாராவும் ஆட்டமிழக்க இந்திய அணி 30 ரன்கள் எடுப்பதற்கு முன்பே தனது 3 விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் கோலியும் 17 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் வீசிய பந்தில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 140 ரன்கள் எடுத்து படுதோல்வியைத் தழுவியது.146 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்துள்ளது.Image result for india australia match இந்திய பேட்ஸ்மேன்கள் ஜொலிக்காத இதற்கு காரணம் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் காரணம் தெரிவிக்கின்றனர். இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீரர் நேதன் லயன் வென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக