வெள்ளி, 7 டிசம்பர், 2018

உலகில் நிகழ்ந்த சுவாரசியமான விஷயங்கள்

உலகில் நிகழ்ந்த சுவாரசியமான விஷயங்கள்

இந்த பதிவில் நாம் காணவிருப்பது உலகில் நிகழ்ந்த சுவாரசியமான விஷயங்கள் தான்.

1.70 கோடி லாட்டரி பரிசு தொகை:

அமெரிக்காவில் குப்பை லாரி ஓட்டிக்கொண்டு இருந்த ஒருவருக்கு சுமார் 70 கோடி ரூபாய் பரிசு தொகை லாட்டரி மூலம் கிடைத்தது. அவர் அந்த தொகையை சூதாட்டம் மூலமாக முற்றிலும் இழந்து சுமார் பதினாறு ஆண்டுகள் கழித்து மீண்டும் குப்பை லாரி ஓட்டவேவந்துவிட்டார்.

2.பைபிள்:

முதலாம் உலகப்போர் அப்போது ஒரு படை வீரர் போருக்கு செல்லும் போது அவருடைய தாயார் பைபிளையும் உடன் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர் அதனை எடுக்க முடியாது என்று தாயாருடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் தாயார் வற்புறுத்தி அந்த பைபிளை உடன் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி பின் அவர் அந்த பைபிளை எடுத்துச் சென்றார். போர் நடந்து கொண்டிருக்கும் போது அவர் மீது ஒரு குண்டு பாய்ந்தது. அவர் கீழே விழுந்து எந்திரித்து பார்த்தார். அப்பொழுது அந்தக் உண்டானது அவருடைய பைபிள் மீது பட்டிருந்ததால் அவர் உயிர் தப்பினார்.

3. குழந்தை குரங்கு:

மூன்றாவதாக பார்க்கவிருப்பது என்னவென்றால் இரண்டு மனநல மருத்துவ தம்பதிகள் தங்களுடைய 2 வயது குழந்தையை ஒரு குரங்குடன் சேர்த்து வளர்க்கத் தொடங்கினர். அவர்கள் நினைத்தது என்னவென்றால் நாளடைவில் அந்த குரங்கானது மனிதர்கள் போல் நடந்து கொள்ளும் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி என்னவென்றால் அவங்களுடைய 2 வயது குழந்தை அந்தக் குரங்கைப் போல் நடக்க தொடங்கியது.

4.சகோதர சகோதரிகள்:

நான்காவதாக பார்க்கப் போக இருக்கும் விஷயம் என்னவென்றால். இரண்டு சகோதர சகோதரிகள் ஒரு ஹோட்டலில் வெயிட்டர் ஆக வேலை பார்த்து வந்தனர். அப்பொழுது சகோதரன் யாரையோ கொலை செய்துவிட்டான் என்று போலீசார் அழைத்து சென்று அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். உடனே அவரது சகோதரி வெயிட்டர் வேலையை  விட்டுவிட்டு சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து விட்டு சுமார் பதினெட்டு ஆண்டுகள் கழித்து தன்னுடைய அண்ணன் நிரபராதி என்று நிரூபித்து அவரை வெளியில் எடுத்தார்.

5. கோழி(HEAD LESS CHICKEN):

Image result for headless chicken
அடுத்ததாக பார்க்கவிருப்பது என்னவென்றால். கோழி பண்ணை ஒன்றில் ஒருவர் கோழியின் தலையை வெட்டி உள்ளார். அவருக்கு திடீர் அழைப்பு வந்ததால் அதனை அங்கேயே விட்டுவிட்டு சென்று உள்ளார். திரும்பி வந்து பார்த்த பிறகுதான் அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது என்னவென்றால் தலை வெட்டப்பட்ட அந்த கோழியானது உயிருடன் அங்குமிங்கும் சுற்றி செய்தது கண்டு வியப்படைந்தார். அந்த கோழியானது சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்ததாக கூறப்பட்டு உள்ளது.

6.ஆப்பிள் நிறுவனத்தில்:

நாம்அடுத்ததாக பார்க்கவிருப்பது ஆப்பிள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஓர் பெண் ஒரு நாள் பணிக்கு தாமதமாக வந்துள்ளார். இதை கண்ட அந்த நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஆன ஸ்டீவ் ஜாப்ஸ் இவ்வளவு தாமதம் என்று கேட்டதற்கு அந்தப் பெண் வரும் வழியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் மந்தமாகி விட்டது என்று காரணம் கூறி உள்ளார். ஸ்டீவ் ஜாப்ஸ் சரி போய் வேலையை பாருங்க என்று சொல்லிட்டு மதியம் உணவு இடைவெளியில் சுமார் 60 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் நிறுவனத்தின் கார் ஒன்றை அந்த பெண்ணுக்கு பரிசாக அளித்துள்ளார். பிறகு அவர் இனிமேல் பணிக்கு தாமதமாக வரக்கூடாது என்று சொல்லி விட்டு சென்று விட்டாராம்.

7. நாய் :

நாம் இந்தப் பதிவில் கடைசியாக காணவிருப்பது என்னவென்றால்.
ஒரு ரொட்டித் துண்டு கடையில் மக்கள் அனைவரும் பணம் கொடுத்து ரொட்டி வாங்கி சென்றனர். இதனை பார்த்துக்கொண்டு இருந்த அங்கு உள்ள நாய் உண்டு பணம் போல் இருக்கும் இலையை எடுத்துக்கொண்டு அந்த கடையில் போய் கொடுத்தது இது கண்ட அந்த கடைக்காரர் சிறப்புற்று அந்த நாய்க்கு ஒரு ரொட்டித் துண்டு போட்டு உள்ளார். தினமும் அந்த நாயானது ஒரு இலையினை எடுத்துக்கொண்டு வந்து அந்த கடைக்கு வந்ததால் அதை பார்த்த அனைவருமே மிகவும் ஆச்சரியம் அடைந்தனர் தினமும் அந்த கடைக்காரர் அந்த நாய்க்கு இலையினை வாங்கிக்கொண்டு ஒரு ரொட்டித்துண்டை பரிசாக அளிக்கிறார்.
********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக