Accounts and Finance
அறிமுகம்
இன்றைய உலகம் பொருளாதார பீடத்தின் மீது நின்று கொண்டிருக்கிறது. அல்லது பொருளாதார அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது. வீட்டு வரவு செலவு கணக்கிலிருந்து, நாட்டு கணக்கு வரை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்படுகிறது.
இன்று ஏராளமானவங்கிகளில் இந்த கணக்கு வழக்கு பொருளாதார வேலைகள்தான் நடந்து வருகின்றன. பலசரக்கு கடை, துணிக்கடை, நகை கடை என பல்வேறு கடைகளிலும் கணக்காளர்கள் அமர்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நிறைய வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் துறை இது.
வழங்கப்படும் படிப்புகளும் கால அளவுகள்
- B.COM(Accountancy)-3 YEARS
- B.COM(Accountancy Finance)-3 YEARS
- M.com(Accountancy)-2 YEARS
- M.com(Accountancy Finance)-2 YEARS
கல்வித் தகுதி
அவர் மேல்நிலைப்பள்ளி படித்து தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். பிறகு இத்துறையில் இளநிலை படிப்பில் (B.COM) சேரலாம். இளநிலை படிப்பிற்கு பிறகு இத்துறையில் முதுநிலை படிப்பானM.COM சேர்ந்து Accounting மற்றும் Finance பிரிவை சிறப்பு பாடங்களாக ஏற்றும் படிக்கலாம்.Computer Accounting என்பது இப்பொழுது மிகவும் பிரபலமாகவும் தேவை உள்ளதாகவும் உள்ள ஒரு படிப்பாகும். இதை கற்றவர்களுக்கு பல இடங்களிலும் பணி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மேல்நிலைப் பள்ளி முடித்து Tally கற்றுக் கொண்டால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.
இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
பொதுவாக பட்டப்படிப்புகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், பொது பல்கலைக்கழகம் வழங்கப்படுகின்றன. இப்படிப்பை இந்தியாவிலுள்ள நிறைய கல்லூரிகள் வழங்குகின்றன அனைத்து மாணவர்களுக்கும் இப்படிப்பு எளிதில் சென்றடையும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளிலும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக