இன்சூரன்ஸ் அதாவது வாகன காப்பீடு திட்டம்
நண்பர்களே நாம் இன்று பார்க்க போகும் பதிவு என்னவென்றால் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் அதாவது வாகன காப்பீடு திட்டம். பொதுவாக நாம் ஒரு ரூமுக்கு சென்று ஒரு இருசக்கர வாகனம் அல்லது கார் வாங்கினோம் ஏனென்றால் அந்த ஷோரூமில் நிர்வாகிகள் இந்த வாகனத்திற்கு கட்டாயம் இன்சூரன்ஸ் செய்து கொள்ளுங்கள் என்று கூறுவார் அதற்கு காரணம் என்ன நம்மில் பலர் ஏன் இன்சூரன்ஸ் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஓடிக்கொண்டே இருக்கும். நீங்கள் இன்சூரன்ஸ் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவே இந்த பதிவு முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். முதலில் இந்த இன்ஷூரன்ஸ் என்பது ஒரு வாகன காப்பீட்டு திட்டம் ஆகும். இப்பொழுது உங்களிடம் ஒரு வாகனம் இருப்பினும் அதற்கு நீங்கள் இன்சூரன்ஸ் போட்டு இருப்பீர்கள். பெரும்பாலானவர்கள் இந்த இன்சூரன்ஸ் என்பது நம் வாகனம் ஏதாவது விபத்தில் சேதம் அடைந்து விட்டாலோ அல்லது வாகனத்தில் கோளாறு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் கிளைம் செய்தாள் வாகனத்தை சரி செய்து தந்துவிடுவார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இன்சூரன்ஸ் அதுமட்டுமல்ல தற்பொழுது உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது யார் மீது மோதினால் அல்லது எதிர்புறம் வரும் வாகனம் மீது மோதினாலோ உங்களுக்கு அல்லது உங்கள் காருக்கு ஏதோ சேதம் ஏற்பட்டாலோ அல்லது உங்களுடன் வருபவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ இல்லையென்றால் எதிர்ப்புறத்தில் நீங்கள் விபத்து ஏற்படுத்திய நபருக்கோ அல்லது வாகனத்திற்கும் அதற்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலோ இந்த இன்ஷூரன்ஸ் மூலம் பணம் பெற்று சரி செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இருசக்கர வாகனம் வைத்திருப்பீர்கள் என்றால் அதற்கு நீங்கள் ஆயிரத்து 1500ரூபாய் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து இருப்பீர்கள் அல்லது அதற்கு மேலும் எடுத்திருக்கலாம். நீங்கள் இன்சூர் கிளைம் பண்ணும்போது உங்களுக்கு அதிகபட்சமாக 40 ஆயிரம் வரை நிதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதிர்புறம் வரும் வாகனத்தின் மீது அல்லால் மீது மோதி விட்டீர்கள் என்றால் இந்த இன்ஷூரன்ஸில் பயன்படுத்தி அந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதை வைத்து வண்டியை சரி செய்யவோ அல்லது காயம்பட்ட ஆட்களுக்கு நீங்கள் பணம் அளிக்கலாம். இன்சூரன்ஸ் விட அதிகமாக உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தால் நீங்கள் உங்களது கைக்காசை போட்டு தான் அதை ஈடுகட்ட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக