திங்கள், 17 டிசம்பர், 2018

Piedi cyclone in India-கரையை கடந்தது "பெய்ட்டி புயல்"

கரையை கடந்தது  "பெய்ட்டி  புயல்"

Image result for piedi cyclone
கரையை கடந்தது "பெய்ட்டி  புயல்". நண்பகல் அளவில் ஆந்திராவில் காக்கிநாடா பகுதியில்"பெய்ட்டி  புயல்" கரையை கடந்தது. கரையை கடக்கும் போது சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதுமட்டுமின்றி கன மழை கொட்டி தீர்த்தது. ஆந்திராவில் கரையோரம் ஒட்டியுள்ள ஆறு மாவட்டங்களில் கனமழை சரமாரியாக வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த போது கிருஷ்ணா மாவட்டத்தில் கடல் பரப்பில் அலைகள் ராட்சச அலைகளாக மேலெழும்பின. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சேர்ந்தது ஆங்காங்கே மரங்கள் எல்லாம் சரிந்து விழுந்தன. போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காக்கிநாடாவில் கொட்டி தீர்த்த கன மழையால் ரோட்டோரங்களில் மழைநீர் வெள்ளம் புரண்டு ஓடியது இதனால் அங்கேயும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீட்டின் மேற்கூரையில் மரங்கள் அனைத்தும் சரிந்து விழுந்தன இதனால் பல வீடுகள் சேதம் அடைந்தன. கடற்படைக் கப்பலான ஜோதி மற்றும் சக்தி மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கனமழையின் காரணமாக கோதாவரி மாவட்டத்தில் சுமார் 50 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மக்கள் அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அளிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். புயல் காரணமாக விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா நகரங்களில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.Image result for piedi cyclone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக