Mysterious Sentinal Island-மர்மத் தீவு சென்டினல்
(அந்தமான் தீவு சென்டினல் காட்டுவாசிகள்)
வணக்கம் நண்பர்களே இந்தப்பதிவில் காணவிருப்பது மர்மம் நிறைந்த சென்டினல் தீவை பற்றி தான். இந்த மர்மம் நிறைந்த தீவு இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கூட்டங்களுக்கு இடையே காணப்படுகிறது. இந்த தீவுக் கூட்டத்தில் வாழும் மக்கள் அனைவருமே சுமார் 3000 ஆண்டுகளாக வெளி உலகத்தில் எவ்வித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வெளியாட்கள் யாரேனும் அந்த தீவிற்குள் சென்றாள் உடனே அவர்களை பின் மற்றும் அன்பினால் கொலை செய்து விடுவார்கள். ஆகையால் மக்கள் யாரும் அந்த தீவு பகுதியில் நுழைய இந்திய அரசாங்கம் முற்றிலுமாக தடை விதித்துள்ளது. தீவை சுற்றி சுமார் 3 கிலோ மீட்டருக்கு மக்கள் யாரும் சுற்றித் திரிய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இந்தத் தீவு மக்கள் ஆபத்தானவர்கள் என்று இந்திய அரசாங்கம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர்தான் கண்டறிந்தது. அந்தமான் தீவு அருகே மிகப்பெரிய அளவில் சுனாமி ஏற்பட்டு அங்கு உள்ள மக்கள் எல்லாம் தவித்துக் கொண்டிருந்த நிலையில் சென்டினல் தீவில் அந்த சுனாமியின் தாக்கம் அதிகளவில் இருந்தது அப்பொழுதுதான் அங்கு மக்கள் இருப்பதை இந்தியா கண்டறிந்தது அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று அந்த தீவில் நுழைய முற்பட்டபோது அவர்கள் வில் அம்புடன் இந்திய கடற்படையினரை தாக்க முற்பட்டனர். இதையடுத்து எவ்வித உதவியும் செய்யாமல் இந்திய கடற்படை திரும்பி சென்றது. இது தொடர்ந்து 2 மீனவர்கள் தங்களது படகு பழுதான காரணத்தால் சென்டினல் தீவில் தஞ்சம் புகுந்தனர் அவர்கள் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று வந்த சென்டினல் தீவு மக்கள் அவர்களை ஈட்டினால் கொலைசெய்து அவர்களது உடலை கடலில் வீசி எறிந்தனர். இதை அறிந்த இந்திய கடற்படை அரசாங்கத்திடம் முறையிடவே இந்திய அரசாங்கம தீவுக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று தடைவிதித்தது. அந்தமான் தீவு சிறையிலிருந்து ஒரு கைதி தப்பிச்சென்று சென்டினல் தீவில் நுழைந்தான் அங்கு அவனைக் கண்ட மக்கள் அனைவரும் இங்கு யாரும் வரக்கூடாது மீறினால் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளனர் இதைக்கண்டு அதிர்ந்து போன அந்த கைதி தப்பி ஓட முயற்சி செய்தபோதும் அவனால் முடியவில்லை பின்னர் அவனையும் கொலை செய்து அவரது உடலை கடற்கரையில் மணலில் குச்சியால் ஊன்றி நிற்க வைத்து அனைவருக்கும் பீதியை ஏற்படுத்தினர். இந்திய அரசாங்கம் யாரும் இனிமேல் சென்டரில் தீவுக்கு செல்ல வேண்டாம் என்று மேலும் வன்மையாக கூறியது. இது அடுத்து ஜான் ஆளும் என்பவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தபோது சென்டினல் தீவுக்கு செல்ல முற்பட்டிருக்கிறார் அவர் ஒரு மத போதகர் என்பதால் அங்குள்ள மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துவ மதத்திற்கு பின்பற்றுமாறு அறிவுறுத்த அந்த தீவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மக்கள் அவரை தீவு கரையிலே வில் அம்பினால் எய்து கொலை செய்தனர். இதிலிருந்துதான் அந்தத் தீவு எவ்வளவு பெரிய ஆபத்து நிறைந்த தீவு என்று உலக மக்கள் அனைவருக்கும் தெரியவந்தது ஜான் ஆலனை அந்தத் தீவிற்கு அழைத்துச் சென்ற 4 மீனவர்களை இந்திய காவல் படையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் தங்களுக்கு நாங்கள் அவரை அங்கு கூட்டிச் சென்றோம் என்று வாக்குமூலம் தெரிவித்துள்ளனர்.
********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக